சென்னை

பாஜகவில் 18 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டில்லி செல்கிறார் 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலையொட்டி ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சென்னையில் வருகிற 11-ஆம் தேதி நடைப்பயணம் மேற்கொள்ளும்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க உள்ளார்.

வரும் 25 ஆம் தேதி அண்ணாமலையின் இந்த யாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர கலந்துகொண்டு பேசுகிறார். தனது நடைப்பயணத்துக்கு மத்தியில் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு விடுத்ததன் பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவ்ர் அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

டில்லியில் பாஜக தேசிய தலைவர் கே.பி. நட்டாவை அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும், தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஒருவரும் சந்தித்து, பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.  இந்நிகழ்வுகள் முடிந்த பிறகு, இன்று இரவே டில்லியில் இருந்து சென்னை திரும்பும் அண்ணாமலை தனது நடைப்பயணத்தை நாளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார்.