டில்லி:

18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள ல் 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அன்றே  இடைத்தேர்தல் நடைபெறும் என்று அகில இந்தியதேர்தல்ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உறுதிப்படுத்தி உள்ளார்.

17வது பாராளுமன்றத்தை உருவாக்கும் வகையில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான  தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல்  நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி   தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான

வேட்பு மனு  மார்ச் 19ம் தேதிதொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச், 26ம் தேதி

வேட்பு மனு பர்சீலனை மார்ச், 27ஆம் தேதி 

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச், 29ஆம் தேதி

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே, 23ஆம் தேதி 

அதைத்தொடர்ந்து  தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்துள்ளார்

மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும்.

அதுபோல புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்/

இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றவர், அரசின்  இலவச

திட்டங்கள் வழங்க அனுமதி இல்லை. மேலும் வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும். தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிப்பது தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.