சென்னை:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படு வர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,52,567 ஆக உள்ளது.  தற்போதைய நிலையில் 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,39,670 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  3023 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில்  60.40% பேர் ஆண்கள் என்றும், 39.60 சதவிகிதம்பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் பட்டியல்,
கோடம்பாக்கம் – 1,186 பேர்
அண்ணா நகர் – 1,004 பேர்
தேனாம்பேட்டை – 783 பேர்
தண்டையார்பேட்டை – 664 பேர்
ராயபுரம் – 796 பேர்
அடையாறு- 844 பேர்
திரு.வி.க. நகர்- 822 பேர்
வளசரவாக்கம்- 739 பேர்
அம்பத்தூர்- 776 பேர்
திருவொற்றியூர்- 273 பேர்
மாதவரம்- 375 பேர்
ஆலந்தூர்- 581 பேர்
பெருங்குடி- 472 பேர்
சோழிங்கநல்லூர்- 332 பேர்
மணலியில் 109 பேரும்

இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.