மருத்துவ துறையில் ஊதிய விகிதங்களை திருத்தியமைப்பதற்காக 17 பேர் கொண்ட குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு அரசாணை

Must read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பதற்காக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க 17 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவம்னைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வேலைவாய்ப்புக்கான குறைந்த அளவு ஊதிய விகிதங்களை திருத்தி அமைப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்க பின்வரும் உறுப்பினர்களை கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவின் தலைவராக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையரும், செயலாளராக பொருளியல் மற்றும் புள்ளியல் துறை உதவி இயக்குனரும், மற்றும் 15 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article