சென்னை:  தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 202 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்னனர்.  மேலும், 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 936 ஆண்கள், 757 பெண்கள் என மொத்தம் 1,693 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக  கோவையில் 206 பேரும், சென்னையில் 202 பேரும், ஈரோட்டில் 134 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும், திருப்பூரில் 110 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு உள்பட 24 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்துள்ளது. சென்னை, கோவை உள்பட 14 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 327 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரத்து 921 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 17 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 8 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 271 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,548 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 334 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 756 பேர் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 73 ஆயிரத்து 214 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.

சென்னையில் நேற்று  202 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,70,76 ஆக உயர்ந்துள்ளது.  4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 8,444 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 53,67,68 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 1864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 46,46,233 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 16.09.2021 அன்று 13,457 ஷாட்கள் வழங்கப்பட்டன.

மண்டலம் வாரியாக விவரம்: