ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கி உள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய  கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி  கடந்த 2 ஆண்டுகளாக பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தடுப்பூசி கிடைப்பதிலும் கடுமையான தட்டுப்பாடு எழுந்துளளது. இந்த  நிலையில் . உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.91 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதும் இதுவரை 19,02,66,584 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பல்வேறு நாடுகளை சேர்ந்த  4,091,477  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 17,34,77,758 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 12,697,349  பேர் உள்ளனர். அவர்களில் 79,190 (0.6%)  ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில்  அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளில் 37,921 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 290 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 29,357,842 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 34,926,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 31,063,987 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 38,112 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன… 413,123 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 43,877 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 19,308,109 பேர இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 45,591பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 1,450 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்..

பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 19,308,109 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 45,591 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 540,500 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 1450 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 5,907,999, பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.