தமிழகத்தில் இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/01/2022

Must read

சென்னை

மிழகத்தில் இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,40,268 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,96,88,723 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 22 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,009 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,561 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,74,009 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,52,348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 8,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,52,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,740 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 6,124 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,83,529 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 60,126 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 2,236 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 2,042 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,66,812 பேர் பாதிக்கப்பட்டு 2531 பேர் உயிர் இழந்து 2,54,134 பேர் குணம் அடைந்து தற்போது 8,740 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,99,283 பேர் பாதிக்கப்பட்டு 2,560 பேர் உயிர் இழந்து 1,80,177 பேர் குணம் அடைந்து தற்போது 16,546 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

More articles

Latest article