சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இன்றைய அமர்வில், கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் பெருவாரியான வெற்றிபெற்று ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது. அதையடுத்து, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து அலுவல் ஆய்வுகுழு கூடி, பேரவை கூட்டத்தொடரை 23ந்தேதி வரை நடத்த முடிவு செய்தது.
இதையடுத்து, 22ந்தேதி மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றும் (23ந்தேதி) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம். அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இன்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கிறார்.
இன்றுடன் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.
அடுத்தக்கூட்டத்தொடர் ஜூலையில் நடைபெறும் என்றும், அப்போது மாநில அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்ககப்படுகிறது.