சென்னை:
தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17,719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.