கோவை
தமிழக அரசு மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
முருகனின் 7-வது படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செல்கிறார்கள்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு அமைச்சர் செய்தியளர்களிடம்,
”மருதமலை கோவில் அடிவாரத்தில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க உள்ளோம். இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்துள்ளது.
முதல்வரின் அனுமதியோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும். மேலும் இந்த கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.”
எனத் தெரிவித்துள்ளார்.