கொழும்பு: வடக்கு கிழக்கு மாகாணத்தின் தேவைக்காக  16 இலட்சம் தடுப்பூசிகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே  அமைச்சர் டக்ளஸிஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்தார்.
இலங்கையில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும்  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அதிபர் ராஜபக்சே ஒப்படைத்தார்.
.
27.07.2021 அன்று இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைந்தார்.  வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான குறித்த தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்டன.
இந்த  நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.