16/12/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Must read

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8,01,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,20,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

சென்னையில் நேற்று மட்டும்  359 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால்,  மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,560ஆக உயர்ந்துள்ளது. அதுபோல நேற்று மட்டும்  5 பேர் உயிர்ழந்தனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா உயிரிழப்பு  3,929  ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில், 375 பேர் தொற்று பாதிப்பில் இருச்து குணம் அடைந்ததால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  2,13,509ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சென்னையில் 3,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை யில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் :- 

கோடம்பாக்கம் – 342 பேர்

அண்ணா நகர் – 366 பேர்

தேனாம்பேட்டை – 272 பேர்

தண்டையார்பேட்டை – 152 பேர்

ராயபுரம் – 188 பேர்

அடையாறு- 419 பேர்

திரு.வி.க. நகர்- 276 பேர்

வளசரவாக்கம்- 194 பேர்

அம்பத்தூர்- 258 பேர்

திருவொற்றியூர்- 57 பேர்

மாதவரம்- 112 பேர்

ஆலந்தூர்- 187 பேர்

பெருங்குடி- 135 பேர்

சோழிங்கநல்லூர்- 66 பேர்

மணலியில் – 53 பேர்.

 

More articles

Latest article