டெல்லி: இந்தியாவில்  கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்றுவரை தினசரி பாதிப்பு 8ஆயிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்தியஅரசு, மாநில அரசுகளிடம் அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. நேற்று முன் தினம் 6,594 நேற்று 8,822 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,213 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,32,45,517 லிருந்து 4,32,57,730 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 7,624 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,67,088 லிருந்து 4,26,74,712 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.65% ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 11 பேர் பலியாகினர். இதுவரை 5,24,803 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,637 லிருந்து 58,215 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.13% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 195.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நேற்று மட்டும்  15,21,942 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.