சென்னை:
தமிழகத்தில் வரும் 18ந்தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவுக்காக 1லட்சத்துக்கு 50ஆயிரத்து 302 எலக்கட்ரானிக் வோட்டிங் மெஷின் (EVM) பயன்படுத்த இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.
தமிழகத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் 5.99 கோடிபேர்
வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள இயந்திரகங்கள்: 1லட்சத்து 50ஆயிரத்து 302
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் : 94 ஆயிரத்து 653
பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம்: தொகுதிக்கு ஒன்று வீதம்
மொத்த வாக்குச்சாவடி மையங்கள்: 67,720
பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் : 7780
வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.
தேர்தலையொட்டி இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.127.66 கோடியில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய செய்தியாளரின் சந்திப்பின்போது, தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.