ணிப்பூர்

தேசிய திரைப்பட விருதை 15 முறை வென்ற அரிபம் சியாம் சர்மா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் அளித்துள்ளது.   அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.  இந்த மசோதாவின்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்களில் இஸ்லாமியர்களை தவிர மற்றவர்களுக்கு குடி உரிமை அளிக்க பரிந்துரை செய்யபட்டுளது.

இதற்கு எல்லைப்புற மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   குறிப்பாக மணிப்பூர் அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   அசாம் கிளர்ச்சியில் உயிரிழந்தோருக்காக வழங்கப்பட்ட விருதுகளை அவர்கள் வாரிசுகள் திருப்பு அளித்தது தெரிந்ததே.

மணிப்பூர் மாநிலத்தில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அரியம் சியாம் சர்மா.   இவர் இஷ்னோவ், இமாகி நிங்க்தெம், மற்றும் லெய்பக்லர் ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றுள்ளார்.  இவர் இதுவரை 15 முறை தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்..   இவருக்கு மத்திய அரசு கடந்த 20006 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

சர்மா, “குடியுரிமை சட்ட திருத்த மசோதா வடகிழக்கு மாநில மக்கள் நலனுக்கும், மணிப்பூர் மாநில மக்களின் தனித்தன்மைக்கும் எதிரானது.  பலர் இதை எதிர்த்ஹ்டும் மத்திய அர்சு இதை நிறைவேற்ற உள்ளது.  இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் நான் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கிறேன்” என அறிவித்துள்ளார்.

இது மத்திய பாஜக அரசுக்கு மேலும் ஒரு பின்னடைவு என கூறப்படுகிறது.