இந்தூர்: மத்தியப் பிரதேசத மாநில வனப்பகுதியில் வெயில் கொடுமை மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் 15 குரங்குகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மாநிலத்தின் தேவாஸ் பிராந்தியத்தின் பாக்லி வனப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகேயிருந்த தண்ணீர் பகுதியை மற்றொரு குரங்கு கூட்டம் கைப்பற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட கூட்டத்தின் குரங்குகளை அனுமதிக்காத காரணத்தினாலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறந்த குரங்குகளின் சடலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டவற்றை வனத்துறையினர் எரித்துவிட்டனர். ஏனெனில், அந்தக் குரங்குகள் ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில், அந்த உடல்களைப் புதைத்தால், பிற குரங்குகளுக்கும் தொற்று பரவக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்விலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் விளக்கினர்.
மேலும், வன விலங்குகளுக்கு முறையான தண்ணீர் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதால், இறந்த குரங்குகளின் உடல் உறுப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.