சென்னை

சென்னையில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு. பொங்கலுக்காக 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

எனவே  பொங்கலை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பி உள்ளனர். இவ்வாறு பயணம் செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 11 ஆம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர்.

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பஸ்கள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்களும் இயக்கப்பட்டன.

அதிகாரிகள் கடந்த 4 நாட்களில் சென்னையில் இருந்து ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து, சொந்த வாகனங்களில் சுமார் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]