லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால்  தலைநகர் லக்னோ உள்பட 15 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 15ந்தேதி வரை சீல் வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

உ.பி. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 326 ஆக  உயர்ந்துள்ளது இதுவரை 3 பேர் பலியான நிலையில், 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் வரும் 15ந்தேதி வரை சீல் வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாநில தலைமை செயலர் தலைமை செயலர், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சீல் வைக்க அரச முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நொய்டா, காசியாபாத், மீரட், லக்னோ, ஆக்ரா, ஷாம்லி, சகாரான்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் சீல் வைக்கப்படும்.

இந்த மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வரும் 13ந்தேதி இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து கொடுக்கப்படும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால், அது சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ குழுவினருக்கும், வீடுகளுக்கே வந்து பொருட்களை கொடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.