14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு கனிகா கபூரிடம் விசாரணை: லக்னோ போலீசார் தகவல்

Must read

டெல்லி: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கனிகா கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று லக்னோ போலீசார் கூறி உள்ளனர்.

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனா்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் தற்போது குணமாகியுள்ளார். இதனால் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

முன்னதாக, பிரிட்டனிலிருந்து கடந்த 10ம் தேதி மும்பை திரும்பிய கனிகா கபூா், பின்னா் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ வந்தார். கடந்த 13, 14, 15 ஆகிய தேதிகளில் 3 விருந்து நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்றார்.

இதையடுத்து நோய் பரப்பும் செயல்களில் அவர் ஈடுபட்டார் என்று கூறி லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இப்போது கனிகா சிகிச்சை முடிந்து தனிமைப்படுத்துதலில் உள்ளார். எனவே இது முடிந்த பிறகே அவரிடம் விசாரணை நடத்த லக்னோ போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

More articles

Latest article