சென்னை
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உள்ளோர் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளன. பல பொருட்கள் சேதமாகி உள்ளன. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
நேற்றைய கடும் காற்று மற்றும் மிக கனமழையால் பல இடங்களில் மின் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின் இணைப்பு ஏராளமான இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை மின் கட்டணம் செலுத்த முடியாமல் பலர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையொட்டி சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் மழை நீர் பாதிப்பு குறைந்த உடன் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]