டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு முறையிவ் முக்கிய மாற்றங்களை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அமல்படுத்தியது. அத்துடன் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வையும் ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம் என்றும் மாணவர்களின் மன உளைச்சலை களைய வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இநத் நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பி தரப்பட மாட்டாது என்றும், கடைசி இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இளநிலை மருத்துவ கலந்தாய்வில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை இளநிலை படிப்பில் 450 இடங்களும், முதுநிலைப்படிப்பில் 9075 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்தபிறகு மீதமாக இருக்கும் மத்தியஅரசுக்கான இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி வழங்கப்படும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 200 முதல் 300 வரை இடங்கள் கிடைத்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தற்போது மத்தியஅரசு செயல்பாடுகளை அறிவித்து உள்ளது.
இந்த கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கை நடைமுறைகளை அமல்படுத்தப்போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் கடைசி இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடைபெறும். ஒரு இடம் கூட மாநிலங்களுக்கு திருப்பி தர மாட்டாது என தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.