டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  3,07,098 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, தற்போதைய நிலவரப்படி, சிகிச்சை பெறுவோர் 11.12% பேர் என்றும், தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்தோர் 87.36% ஆக உயர்ந்துள்ள தாகவும், உயிரிழப்பு  1.52% என்றும் தெரிவித்து உள்ளது. அதேவேளையில், கொரோனாவால் இறந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என்றும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இன்று காலை 9 மணி நிலவரப்படி, கடந்த  24 மணி நேரத்தில்,கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  புதிதாக 67,708 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73,07,098 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும்  680 பேர் தொற்று பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,266 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில்  தொற்று பாதிப்பில் 81,541 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 63,83,442ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,12,390 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.36% ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது. சி கிச்சை பெறுவோர் விகிதம் 11.12% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,36,183 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 9,12,26,305 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் ) தெரிவித்துள்ளது.
கொரோனா  தொற்று பாதிப்பு  அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா  தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.  2-வது இடத்தில் ஆந்திர மாநிலமும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.