சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,591 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு சென்னையில் 150 என்ற அளவில் இருந்து வந்த நிலையில், நேற்று 200க்கும் மேல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,37,010 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 212 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். நேற்று 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல நேற்று கொரோனாவிலிருந்து 1,537 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,85,244 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 16,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மேலும் 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,46,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,435 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 172 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,36,421 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
[youtube-feed feed=1]







