சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 2,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை விர செங்கல்பட்டு 685 பேர், கோவை 534 பேர், திருவள்ளூர் 473 பேர், காஞ்சிபுரம் 203 பேர், தஞ்சையில் 166 பேருக்கு கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக இன்று பாதிக்கப்பட்டோர் விவரம்:
அரியலூர் 29
செங்கல்பட்டு 685
சென்னை 2,558
கோவை 534
கடலூர் 179
தர்மபுரி 83
திண்டுக்கல் 120
ஈரோட் 144
கல்லக்குரிச்சி 41
காஞ்சீபுரம் 203
கன்னியாகுமரி 96
கரூர் 53
கிருஷ்ணகிரி 162
மதுரை 234
நாகப்பட்டினம் 134
நமக்கல் 96
நீலகிரி 39
பெரம்பலூர் 11
புதுக்கோட்டை 62
ராமநாதபுரம் 46
ராணிப்பேட்டை 101
சேலம் 195
சிவகங்கை 59
தென்காசி 67
தஞ்சாவூர் 166
தேனி 56
திருப்பதூர் 63
திருவள்ளூர் 473
திருவண்ணாமலை 90
திருவாரூர் 125
தூத்துக்குடி 169
திருநெல்வேலி 171
திருப்பூர் 233
திருச்சி 241
வேலூர் 141
விழுப்புரம் 45
விருதுநகர் 79