சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 14ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.   இதையடுத்து விண்ணபித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில்,  10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் ஜுன் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  ஜூன் 27ந்தேதி  வெளியிடப்பட்டது. பொறியியல் கலந்தாய்விற்கு 3,23,074 பேர் பதிவு செய்துள்ளனர். 2.41 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  பொறியியல் கலந்தாய்வு  இன்று (ஜூலை) 7ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 26ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று  சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ந்தேதி வரை நடைபெறும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் ஜூலை 11 வரை நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறுகிறது.

துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் ஆக. 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.