சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் முதல்வர்கள் இல்லாமலும், பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் காரணமாக, முதல்வர்கள் நியமிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் முதல்வர் பதவி காலிய இருந்த 14 மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு முதல்வர்களை நியமனம் செய்துள்ளது. அதன் விவரம் வரு மாறு
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜி.சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் எம். பவானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக டி. ரவிக்குமாரும்,
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும்
கேஏபி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேலும்,
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ்குமார்,
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராக அமுத ராணி,
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியோ டேவிட்
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால்,
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி உள்பட 14 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.