சென்னை,
எடப்பாடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று14 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மீண்டும் கூண்டோடு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவித்து உள்ளார்.
போலீஸ் கண்காணிப்பு பிரிவு டிஜிபி யாக இருந்த கே.பி.மகேந்திரன் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பியாக இருந்த சைலேந்திரபாபு, ஸ்ரீ லஷ்மி பிரசாத் வகித்து வந்த ரயில்வே ஏ.டி.ஜி.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
ரயில்வே ஏ.டி.ஜி.பியாக இருந்த ஸ்ரீ லஷ்மி பிரசாத் கே.பி. மகேந்திரன் வகித்து வந்த போலீஸ் கண்காணிப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அசுதோஸ் சுக்லா, சைலேந்திரபாபு வித்து வந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து கழக ஏடிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், அசுதோஸ் சுக்லா வகித்து வந்த அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த சுனில் குமார், கரன்சின்ஹா வகித்து வந்த சீருடை பணியாளர் பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடை பணியாளர் பிரிவு ஏடிஜிபியாக இருந்த கரண்சிங்ஹா, அமரேஷ் புஜாரி பதவி வகித்து வந்த சாலை மற்றும் பாதுகாப்பு துறை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாலை மற்றும் பாதுகாப்பு துறை ஏடிஜிபியாக இருந்த அமரேஷ் புஜாரி, சுனில் குமார் வகித்து வந்த குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், கல்பனா நாயக் வகித்து வந்த சீருடைப் பணியாளர் தேர்வுவாரிய உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வுவாரிய உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக், பொருளாதார குற்றசெயல்கள் பிரிவு ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றசெயல்கள் பிரிவு ஐ.ஜியாக இருந்த அசோக் குமார் தாஸ், செந்தாமரைக்கண்ணன் வகித்து வந்த காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் ஐ.ஜியாக இருந்த சஞ்சய் குமார் , அசோக் குமார் தாஸ் வகித்து வந்த பொருளாதார குற்றசெயல்கள் பிரிவு ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஐ.ஜியாக இருந்த சங்கர், சஞ்சய் குமார் வகித்து வந்த சேலம் ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதம் ஏந்திய பிரிவு டிஐஜி தீபக் எம்.டேமர், ரயில்வே துறை டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் 15ந்தேதி ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர்.
அதற்கு முன்னர் மே 31ந்தேதி 32 ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அரசு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
அதேபோல் மே 26அன்றும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
கடந்த 5 மாதத்தில் 4 முறை ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.