சென்னை: தமிழ்நாட்டில் இருந்த கேரளா இயக்கப்பட்டு வரும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் 1ந்தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ஜனவரி 1 ஆம் தேதி முதல் திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டா்சிட்டி (22627/22628), பகல் நேர நாகா்கோவில் – கோயம்புத்தூா் – நாகா்கோவில் ரயில் (16321/16322), மதுரை – புனலூா் – மதுரை விரைவு ரயில் (16729/16730), ராமேசுவரம் – திருச்சி – ராமேசுவரம் ரயில் (16850/16849), திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி ரயில் (16791/16792) ஆகிய 5 விரைவு ரயில்களில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக  மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை, முத்துநகர், வைகை, பாண்டியன் ஆகிய விரைவு ரயில்களில் மு மார்ச் 10-ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகள்  இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது கேரளா செல்லும் ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது..

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (வண்டி எண்: 16089/16090) ஏலகிரி எக்ஸ்பிரஸ்,

நிலாம்பூர்-கோட்டயம்-நிலாம்பூர் (16325/16326) எக்ஸ்பிரஸ்,

புனலூர்-குருவாயூர்-புனலூர் (16327-16328) எக்ஸ்பிரஸ்,

கொச்சுவேலி-மங்களூரு-கொச்சுவேலி (16355/16356) அந்தியோதயா எக்ஸ்பிரஸ்,

கண்ணூர்-கோவை-கண்ணூர் (16607/16608) எக்ஸ்பிரஸ்

, திருச்சி-பாலக்காடு-திருச்சி (16843/16844) எக்ஸ்பிரஸ்,

நாகர்கோவில்-கோட்டயம் (16366) எக்ஸ்பிரஸ்,

மங்களூரு-கோழிக்கோடு (16610) எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மே மாதம் 1-ந்தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் மீண்டும் இயக்கப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. எனவே, மே மாதம் 1-ந்தேதி வரை மேற்கண்ட ரெயில்களில், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பதற்கு பயணிகள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் அனைத்தும் திருப்பி வழங்கப்படும். இதுகுறித்த தகவல்கள் அவரவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.