சென்னை:
மிழகத்தில் 14 மாவட்டங்களில்  அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  ஆர்.எஸ்.எஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது.
rss
தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஒசூர் மற்றும் கோவையில்  இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.  திண்டுக்கலில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஓசூர் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கொலைக்கு தனிப்பட்ட பகையே காரணம் என்பது தெரியவந்தது. கோவை சசிக்குமார் கொலைக்கு, அவர் கலப்புமணம் செய்துகொண்டது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்துத்துவ பிரமுகர்கள் கொலையுண்டால், அதையடுத்து வன்முறையில் அந்த அமைப்புகள் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கோவையிலும் பெரும் வன்முறையில் இறங்கின.
இந்த நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன்,  இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க  அரசு வழக்கறிஞருக்கு கால அவகாசம் அளித்து, விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தது உத்தரவிட்டார்.

[youtube-feed feed=1]