சென்னை: தமிழகத்தில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை மாதம் 15ந்தேதி முதல் இன்று (ஆகஸ்டு 14) வரை தொற்று பாதிப்பு குறித்த விவரங்கள் கீழே வரைபடம் (Graph) மூலம் தெளிவாக விளக்கி காட்டப்பட்டுஉள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,058-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளளில் தொற்று பாதிப்பில் இருந்து 1070 பேர் கொரோனாவில் மீண்டுள்ளனர். இதுவரை 99.806 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் , 10,868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 11,025 பேருக்கு தொற்று பரிசேதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,384 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 529 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. இந்த கிளினிக்குகளில் 27,053 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1,440 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.