சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம் சாட்டிய நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான், மாநிலத்தில் தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது அப்பாவி மக்களின் நிலைமையை யோசிக்க வேண்டும் என கூறினார்.
முன்னதாக சென்னை மாநகர காவல்ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது கொலை” எனத் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, ஜாதிய மோதல்கள், போதைபொருள் கடத்தல், விற்பனை போன்றவை சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி அரசியல் கொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக காவல்துறை முறையான நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், பல அரசியல் கொலைகளில் திமுகவினர் உள்பட பலர் சிக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த கொலை குற்றவாளிகள் மீதான நடவடிக்கையில் தொய்வு காணப்படுகிறது. சாதாரண குற்றவாளிகளின் கை, கால்களை உடைத்து பயத்தை ஏற்படுத்தும் காவல்துறையினர், கொலை குற்றவாளிகள், போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மேம்போக்காக நடவடிக்கை எடுப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராக், ஒரு கும்பலால் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்களை ஏற்படுத்தி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராக் கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி உள்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆம்ஸ்ட்ராக் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். இப்படி ஒரு சூழல் வரும்என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறியவர், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினரின் நடவடிக்கை கேள்விக்குறியாகவே உள்ளதாக கூறியதுட, மாநில தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில், சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது? என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநிலத் தலைவரை தலைநகரிலேயே கொல்ல முடியும் என்றால் கிராமத்தில் இருப்பவர்களின் நிலையை யோசிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார்.
எங்கே போகிறது தமிழகம்? 17 வயது சிறுமி கர்ப்பம் – 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது