சென்னை:
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவம் திட்டம் உலக அளவில் சிறப்பான திட்டம் எனக் கூறினார். இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 நாட்களில் 13,247 பேர் பயனடைந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடி பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.