காந்திநகர்: நூறாண்டை கடந்த குஜராத் மோர்பி பாலம் ரூ.2 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தீபாவளி அன்று திறந்து விடப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் காரணமாக, அறுந்து விழுந்து 132 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், அந்த தொங்கு பாலம் அறுந்து விழும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள நூற்றாண்டு கடந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் கீழ் ஓடும் மாச்சு ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?