டெல்லி: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் மது போதைக்கு 1319 பேர் பலியாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் நாடு முழுவதும் நடைபெறும் குற்றச்செயல்கள், பாலியல் குற்றங்கள், விபத்துக்குள் போன்றவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுகிறது. அதன்படி, தற்போது வெளியாகி உள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு (2011) மட்டும் நாடு முழுவதும் போதைப் பழக்கங்களால் 10,500 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
அதாவது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று கூறியிருப்பதுடன், போதை பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. கடந்த 2020-ல் 9 ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2021ம் ஆண்டு 10,500 ஆக அதிகரித்திருக்கிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,818 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், மத்தியப் பிரதேசத்தில் 1,614 பேரரும், தமிழ்நாட்டில் 1,319 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2015ம் ஆண்டில் 100க்கும் குறைவான வழக்குகளைக் கொண்டிருந்த கர்நாடகா, கடந்த 2021ல் 902 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக பதவி ஏற்றபிறகு, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள தற்கொலைகளும் அதிகரித்துள்ளது.