டில்லி

ந்தியன் ரெயில்வே நிர்வாகம் 13000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   இதில் பலர் முன்னறிவிப்பின்றி அடிக்கடி அல்லது நீண்டநாள் விடுமுறை எடுத்து வருவதாக புகார் எழுந்தது.  இதை ஒட்டி இந்திய ரெயில்வே ஊழியர்களின் விடுமுறை பற்றி ஒரு கணக்கெடுப்பு  மற்றும் பரிசோதனை நடத்தியது.

அப்போது 13000 ஊழியர்கள் முறையான முன்னறிவிப்பு அளிக்காமல் மற்றும் மேல் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்தது தெரிய வந்துள்ளது.   இதனால் ரெயில்வே நிர்வாகத்தின் பணி பெரிதும் பாதிக்கபட்டதும் தெரிய வந்துள்ளது.   அதையொட்டி ரெயில்வே நிர்வாகம் இந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுத்து அந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதன் மூலம் ரெயில்வேயின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும் என்றும்  பயணிகளின் சிரமம் மிகவும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.