நாள் ஒன்றுக்கு 13ஆயிரம் சோதனை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது….பிரகாஷ் 

Must read

சென்னை:
சென்னையில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று கொரோனா  பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,377  ஆக அதிகரித்துள்ளது.   இதுவரை 67,077 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,923  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,376  பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறியதாவது,
சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.  முன்பு 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், அவர்களில்  1,500 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது,  13 ஆயிரம்  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாசிடிவ் என சோதனை முடிவுகள் வருகின்றன.
தமிழக முதல்வர் உத்தரவுபடி சென்னையில்  கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருவதாக கூறியவர்,   நாள் ஒன்றுக்கு 13,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article