சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.

தமிழக மீனவர்கள் வங்கக்க்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர், தமிழக மினவர்களை கைது செய்வதும், அடித்து விரட்டுவதும், தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது மட்டுமின்றி, அவற்றை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றப்புள்ளி வைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கக்டலில் உள்ள நெடுந்தீவு அருகே  மீன்பிடித்துக்கொண்டிருந்த,   ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 13 மீனவர்கள் இருவேறு தினங் களில்  இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.

அதாவது, கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்து, அவர்களை  இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதுபோல,  கடந்த ஜூலை 12 ஆம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அதோடு ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்து, படகுகள், வலைகள், மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுத்தார். மத்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசுடன் பேச்சுநடத்தி மீனவர்களை விடுதலை செய்ய அறிவுறுத்தியது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, லங்கை நீதிமன்றம், புதுக்கோட்டை ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும்  இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்தது.  அதன்பிறகு, அவர்களை அழைத்துச்சென்ற இந்திய தூ தரக அதிகாரிகள்,  அவர்கள் தமிழ்நாடு திரும்ப ஏற்பாடுகள் அதன்படி,  அதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 13 பேருக்கும் தேவையாஉதவிகளை செய்ததுடன், அவர்கள் இந்தியா செல்ல  விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து , 13 மீனவர்களையும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.