திருச்சி

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் கல்லூரியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 13 மூட்டை பித்தளை பாத்திரங்கள் பறிமுதல் செய்யாட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.  இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பறக்கும், படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசு பொருட்கள் எனப் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.    பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் அண்ணன் உதயகுமார் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.  கல்வி நிறுவன ஊழியரான வீரபாண்டி என்பவர் வீட்டில் நேற்று முன் தினம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.  அப்போது அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் கல்லூரியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.  இந்த கல்லூரி இலுப்பூர் அருகே உள்ளது.  இங்குத் தேர்தல் அலுவலர் தண்டபாணி மற்றும் உதவி அலுவலர் பழனிச்சாமி ஆகியோரின் குழுவினர் நடத்திய சோதனையில் 13 மூட்டைகளில் 650 பித்தளை பொங்கல் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.