மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் செல்ல இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீண்டும் சூலூருக்கு திரும்பிய போது நொறுங்கி விழுந்தது.
இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தனது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேருடன் பயணம் செய்த நிலையில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்களுடன் விவரித்தார்.
இந்நிலையில், இன்று மாலை விபத்து நடந்த பகுதிக்கு ராஜ்நாத் சிங் வருவதாக கூறப்படுகிறது.