சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்  தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த குழுவில் மேலும் 13 பேர் நியமிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா மீது ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. அவரது மகளுக்கு விதியைமீறி பணி வழங்கியதாகவும்,  மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும்  புகார்கள் குவிந்ததால் அவற்றை விசாரிக்கத் தமிழக அரசு முன்வந்தது.

இதையடுத்து சூரப்பா மீதான  புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தமிழக உயர்கல்வித் துறையால் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது அவரது குழுவில் மேலும் 13 பேர் நியமித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. விரைவில் இந்த குழுவினர் விசாரணை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.