தமிழகத்தில் 13 ஐ பி எஸ் அதிகாரிகள் மாற்றம்

Must read

சென்னை

தமிழகம் முழுவது 13 ஐ பி எஸ் அதிகரிகளை மாற்றி தமிழக உள்துரை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவின் படி மாநிலம் முழுவது 13 ஐ பி எஸ் அதிகாரிகள் மற்றப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் பின் வருமாறு.

1.சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக பதவி வகித்த டி.எஸ். அன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2.மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பதவி வகித்த பாலகிருஷ்ணன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3.தி.நகர் துணை ஆணையர் பதவி வகித்த அரவிந்தன் பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

4.பூக்கடை துணை ஆணையராக பதவி வகித்த இ.டி.சாம்சன் கடலோர காவற்படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

5.கடலோர காவற்படை எஸ்பி அஷோக்குமார் தி.நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6.வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக பதவி வகித்த ரவளிப்பிரியா மாதவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7.மாதவரம் துணை ஆணையர் கலைச்செல்வன் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8.சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையர் தீபா கெனிகர் சேலம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

9.சேலம் மாவட்ட எஸ்பியாக பதவி வகிக்கும் ஜார்ஜி ஜார்ஜ் சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

10.தஞ்சாவூர் எஸ்பியாக பதவி வகிக்கும் டி.செந்தில் குமார் ராஜபாளையம் 11-வது பட்டாலியன் கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

11.ராஜபாளையம் 11-வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி வகிக்கும் எஸ்.எஸ்.மகேஷ்வரன் தஞ்சாவூர் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

12.கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக பதவி வகித்த மகேஷ்குமார் தர்மபுரி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

13.தர்மபுரி மாவட்ட எஸ்பியாக இருந்த பண்டி கங்காதர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

More articles

Latest article