சென்னை:

மிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகமுடித்துக்கொண்டு நாளை காலை சென்னை திரும்புகிறார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், மின்துறை, தொழில்துறை ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி ஆகஸ்டு மாதம் 28ந்தேதி வெளிநாட்டுக்கு புறப்பபட்டுச் சென்றார். அவர் வெளிநாட்டு பயணங்களை வெற்றிகரமாக முடித்து விட்டு, நாளை (செப்டம்பர் 10ந்தேதி) அதிகாலை  சென்னை திரும்புகிறார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறை பயணமாக 28.8.2019 முதல் 9.9.2019 வரை 13 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த பயணத்தின் போது, இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்கள். அத்துடன் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பங்களை பார்வையிட்டு, அதை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றியும் கேட்டறிந்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று, தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து, வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 10.9.2019 அன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.