விருதுநகர்: மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில். இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.  இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த மாதம் மகாளய அமாவாசை, நவராத்திரி விழாக்களையொட்டி 13 நாட்கள்  பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, செப்டம்பர் 23ந்தேதி முதல் அக்டோபர் 5ந்தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.