சென்னை: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு கோவிலில் திருடப்பட்ட சமர்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை திருடிய சிலை திருட்டு கும்பல், போலிச் சிலைகளை நிறுவியுள்ளது தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட பழங்கால சிலைகள் எங்குள்ள என ஆய்வு செய்து அவற்றை மீட்கும் பணிகளை சிலை தடுப்பு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்,

ஒரே கோவிலை சேர்ந்த மூன்று பழங்கால சிலைகளில் இணையர்களை பிரித்து, அமெரிக்காவில் உள்ள கலை அருங்காட்சியகம் மற்றும் கலை பொருட்களுக்கான ஏல கூடத்தில் விற்றுள்ள சிலை திருட்டு கும்பல், அதற்காக போலிச் சிலைகளை நிறுவியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்தநிலையில், தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து  இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பழமையான கோவிலில் திருடப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள சம்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

,இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி கடந்த ஓராண்டில் மட்டும் பத்து சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், மேலும் பல திருடுபோன சிலைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.