டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 78யிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவில் 2வது கட்ட அலை பரவி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு தினசரி 90ஆயிரத்தை தாண்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 94,409 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,51,788 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 77,860 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,99,298 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 1111 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 78,614 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் 9,73,211 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.