சென்னை: தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிககை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,61,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 81.62 % குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 989 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,058 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று மட்டுமே 1070 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 99.806 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் , 10,868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,384 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,886 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/ வெளிநாடுகளில் இருந்து வந்த 867 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 726 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4293 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,67,334-ஆக அதிகரித்துள்ளது.