சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி, நேற்று மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 52வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், தற்போது 31819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.‘
நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 3104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24,56,165 பேர் குணமடைந்துள்ளனர். அதுபோல நேற்று மட்டும் 36 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33454 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், நேற்று 6 பேர் இறந்துள்ளனர். கோவை, கடலூர், ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.
தலைநகர் சென்னையில் நேற்று 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சென்னையில் 5,35,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்ற 6 பேர் உயிர் இழந்துள்ளனர்.. இதுவரை 8,262 பேர் மரணம் அடைந்துள்ளனர். 209 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,25,336 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
12.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 27,23,629 பேருக்கும், 26,148 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 12.07.2021 அன்று மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக விவரம்: