ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 11.95 கோடியை தாண்டியது. கடந்த சில மாதங்களாக குறைந்துவந்தகொரோனாதொற்று உருமாறிய நிலையில் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகள் அச்சத்தில்உள்ளன.
2019ம் ஆண்டு அக்டோபரில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா ஓராண்டுகளை கடந்தும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தொடர்ந்து வருகிறது. தற்போது உருமாறிய வகையில் பரவும், இந்த கொடியை வைரஸ் தாக்குதலுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் 2 கோடியை தாண்டியது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியே 95 லட்சத்துக்கு 77ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96245,824 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 லட்சத்து 50 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 21,715,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,862 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 36,136 பேருக்கும், ரஷ்யாவில் 10,253 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.