டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 13 லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல உயிரிழப்பும் 1லட்சத்துக்கு 38ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக நாடுகளை கடந்தஓராண்டுக்கும் மேலா வாட்டி வதைத்து வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். இதன் ஆட்டம் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய தோற்றத்துடன் மீண்டும் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிப்பு காரணமாக பிரேசில் உள்பட சில நாடுகள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 24,885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,13,33,491 ஆக அதிகரித்துள்ளது.  தற்போதைய நிலையில் 1,99,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 19,972 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,09,71,341 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று மட்டும் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,58,483 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில்  மகாராஷ்டிரா முதலிடத்தலும், கேரளா இரண்டாவது இடத்திலும் தொடர்கிறது.