சேலை அணிந்தன் மூலம் கிடைத்த அனுபவங்கள்…?
நான் முதன் முதலில் இசை கற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்து குடியேறிய போது எனக்கு வயது 19. எனக்கு ஹிந்துயிசம் கலாச்சாரம் குறித்து தெரியாது. நான் இங்கே பெண்கள் சேலை அணிவதை பார்த்து ஆ ச்சர்யப்பட்டேன். சேலை அணிவது மிகவும் சிக்கலாக இருந்தது. காலப்போக்கில் சேலை மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. இங்குள்ள சேலை கலாச்சாரத்தை உணர்ந்து, சேலை மீதான கவுரவம் குறித்து தெரிந்து கொண்டு, அதை மதிக்க துவங்கினேன்.
இங்கு வந்த புதிதில் என குருநாதர் கூறியபடி குர்தா உள்ளிட்ட ஆடைகளை உடுத்தினேன். பின்னர் நான் வெளிநாட்டு பெண் தெரியபடுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக சேலையை கட்ட தொடங்கினேன். சேலை கட்ட தொடங்கியதால் என்னை யாரும் அந்நியரை போல் நடத்தவில்லை. அதற்காக வீட்டில் எந்த நேரமும் சேலை அணி ந்துக் கொண்டு இருக்கவில்லை.
குருஜியுடன் இருக்கும்போது மற்றும் சில முக்கிய நிகழ்வுகளின் போது சேலை அணிந்து கொள்ள பிடிக்கும்.   சேலை அணிவது இயற்கையாக இருக்கும் என்பதாலும், பார்ப்பவர்களுக்கு தவறாகவும் தெரியாது என்பதால் சேலை அணிந்தேன்.
சேலைகளில் எனக்கு பிடித்தது காட்டன் வகை சேலைகள். காஞ்சிபுரம் சேலைகளும் பிடிக்கும். தமிழக பெண்க¬ள் எளிய முறையில் சேலை அணிவதை பார்த்திருக்கிறேன். நான் மாணவிகள் அணிவிது போல் முந்தானைக்கு பின் குத்தி அணிவேன். சேலை அணிய கற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் அது எனக்கு பிடித்திருந்தது. கோவில், ஆஸ்ரம், கிராமம், திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு செல்லும் போது சேலை அணிந்து செல்வேன்.
சேலை என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. சில சமயங்களில் சோம்பேறித் தனம் ஏற்படுவதால் சேலை அணியாமல் செல்வேன். சேலை அணிந்து செல்லும் போது எவ்வித விமர்சனமும் ஏற்படாததை உணர முடிந்தது. எந்த நாட்டில், எந்த கலாச்சாரத்தில் இருக்கிறேனோ அதற்கு ஏற்ப நான் மாறிக் கொண்டேன். இது நான் பழகிய, என்னை சுற்றியிருந்த மக்களுடனான உறவை மேம்படுத்தியது. நகரில் நான் சேலை அணிந்து சென்றபோது பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், கிராமங்களில் சேலை அணிந்து சென்றபோது மரியாதை கிடைத்தது.